வெள்ளி, 20 ஜனவரி, 2012

பணத்தை எரித்து குளிர் காய்ந்த முதியவர் ..

உடல்  பருமனுக்கு  தனி  வரி..

                நாட்டுக்கு நாடு வரி வசூல் செய்வது சற்று வித்தியாசம் இருக்கலாம் . ஆனால் தற்போது உடல் பருமன் உடையவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு தனி வரி வசூல் செய்ய விமான நிறுவனங்கள் தீர்மானித்து உள்ளன இதற்க்கு குண்டானவர்கள் மத்தியில்  தனி எதிர்ப்பு  கிளம்பியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலோர் இந்த புதிய வரியை வரவேற்கிறார்கள். உடல் குண்டானவர்கள் கூடுதல் வரி செலுத்துவது சரியானதே என்று கூறுகின்றார்கள்.

பணத்தை எரித்து குளிர் காய்ந்த முதியவர் .. 

               சீனாவை சேர்ந்த யாங்சன் கிம் ( வயது 66 ) தனது குழுவினருடன் அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றார் . அப்போது அவர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார் . மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியாததால் அங்கு அவர் இரண்டு நாட்களாக அவதிப்பட்டார். அங்கு கடும் குளிர் தாக்கியதால் , குளிர் காய்வதற்கு அங்கிருந்த காய்ந்த இலைகளை போட்டு எரித்தார் . கடைசியாக வேறு பொருள்கள் இல்லாமல் போகவே தன்னிடம் இருந்த ஒரு டாலர் , ஐந்து டாலர் நோட்டுக்களை போட்டு எரித்தார் . இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை மீட்புக்   குழுவினர்    காப்பாற்றினர் .

சனி, 11 ஜூன், 2011

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி

அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி 

                             வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அரசு அரசு தொழிற்பயிற்சி  நிலையங்களில் கை வினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் 01-08-2011 முதல் தொடங்கும் தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன . மகளிருக்கான 30 % இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன . 14 வயதுக்கு மேற்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் . இவர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது .

            கல்வி தகுதி :-

                                எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி


அனைத்தும் இலவசம் :-

                               இலவச பயிற்சி தவிர இலவச பேருந்து பயண சலுகை , மற்றும்  மாதந்தோறும் கல்வி உதவித் தொகை .


பயிற்சி நிலையங்கள் :-

                   அம்பத்தூர் , அம்பத்தூர்  (மகளிர் ) , வடசென்னை , கிண்டி , கிண்டி (மகளிர் ) , செங்கல் பட்டு , திருவான்மியூர் , வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் , கடலூர் ,  கடலூர் (மகளிர் ), உளுந்தூர்பேட்டை , சேலம் , சேலம் (மகளிர் ), மேட்டூர் அணை , ஓசூர் , தருமபுரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர்,(மகளிர் ), திருப்பூர் , தஞ்சாவூர், நாகபட்டினம் , மதுரை , மதுரை(மகளிர் ), தேனி திண்டுக்கல் ,திண்டுக்கல்(மகளிர் ) , விருதுநகர், பரமக்குடி , இராமநாதபுரம் , காரைக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், நாகர்கோவில்(மகளிர் ), தூத்துக்குடி , அம்பாசமுத்திரம், தென்காசி,  நீடமங்களம், இரானிபேட்டை, திருக்குவளை, தாராபுரம், ஈரோடு, குன்னூர்  , திருச்சி ,  புள்ளம்பாடி (மகளிர் ), அரியலூர், புதுக்கோட்டை , ஆண்டிபட்டி (மகளிர் ), கரூர் (மகளிர் ), நாமக்கல் (மகளிர் ) , ஆண்டிமடம் , பெரம்பலூர், சிவகங்கை , மற்றும் நாகலாபுரம் 

                        மாற்றுதிரனாளிகள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ ரீதியாக தகுதியின் அடிப்படையில் சிலகுரிப்பிட்ட தொழிர்பிரிவுகளில் மட்டும் , சேர்க்கை அனுமதிக்கப்படும். முன்னாள் இராணுவத்தினர் வாரிசுதாரர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள முன்னாள் இராணுவ நல அலுவலகம் மூலமாக அனுப்பவேண்டும் .


விண்ணப்பிப்பது எப்படி ?  


                              விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கைஏட்டினை அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ஐம்பது ரூபாயை செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம் . ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பிரிவில் சேர விரும்புவோர்  ஒவ்வொரு பிரிவிற்கும் தனி தனி விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
                                பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தினை சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு  மட்டுமே அனுப்ப வேண்டும் . 

                                 கடைசி நாள் :- 21-06-2011

நன்றி : புதிய தலைமுறை  9-ஜூன் -2011

வியாழன், 9 ஜூன், 2011

தி.மு.க ஊழல் செய்ய அ. தி.மு.க - வே காரணம்

                                              1973 ல் லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு மசோதாவை  தி.மு.க அரசு கொண்டு வந்ததை அ. தி.மு.க அரசு திரும்ப பெற்றது . கழக அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்தின் அடிபடையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிக்க  தமிழக அரசின் சார்பில் நியமிக்கபட்டார். அனால் அடுத்து வந்த அ. தி.மு.க அரசு அந்த சட்டத்தையே திரும்ப பெற்று விட்டார்கள் . 
                                            இந்த சட்டம் நடை முறையில் இருந்திருந்தால் ஆ.ராசா , கனிமொழி ஆகியோர் இன்று சிறையில் இருக்க மாட்டார்கள் . அ. தி.மு.க அந்த சட்டத்தை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் இன்று  தி.மு.க  விற்கு இது போன்ற ஊழல் சூழ்நிலைக்கு ஆளாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது ... ஆக     தி.மு.க ஊழல் செய்ய அ. தி.மு.க - வே காரணம்  என்று இதன் மூலம் தெரிய வருகின்றது