உடல் பருமனுக்கு தனி வரி..
நாட்டுக்கு நாடு வரி வசூல் செய்வது சற்று வித்தியாசம் இருக்கலாம் . ஆனால் தற்போது உடல் பருமன் உடையவர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு தனி வரி வசூல் செய்ய விமான நிறுவனங்கள் தீர்மானித்து உள்ளன இதற்க்கு குண்டானவர்கள் மத்தியில் தனி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலோர் இந்த புதிய வரியை வரவேற்கிறார்கள். உடல் குண்டானவர்கள் கூடுதல் வரி செலுத்துவது சரியானதே என்று கூறுகின்றார்கள்.
பணத்தை எரித்து குளிர் காய்ந்த முதியவர் ..
சீனாவை சேர்ந்த யாங்சன் கிம் ( வயது 66 ) தனது குழுவினருடன் அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றார் . அப்போது அவர் மலைப்பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார் . மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியாததால் அங்கு அவர் இரண்டு நாட்களாக அவதிப்பட்டார். அங்கு கடும் குளிர் தாக்கியதால் , குளிர் காய்வதற்கு அங்கிருந்த காய்ந்த இலைகளை போட்டு எரித்தார் . கடைசியாக வேறு பொருள்கள் இல்லாமல் போகவே தன்னிடம் இருந்த ஒரு டாலர் , ஐந்து டாலர் நோட்டுக்களை போட்டு எரித்தார் . இரண்டு நாட்களுக்கு பிறகு அவரை மீட்புக் குழுவினர் காப்பாற்றினர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக